districts

img

பல் மருத்துவப் படிப்புக்கு தேர்வான மாணவருக்கு கல்வி ஊக்கத்தொகை

தஞ்சாவூர், டிச.2- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள பழைய நகரம் - சீவன்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் மணிவேல். இவரது மகன் ம.ராஜவேல். பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவரான இவர், வீட்டில் இருந்து படித்தவாறு நீட் தேர்வு எழுதினார்.  இந்நிலையில், அவர் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில், சென்னை அருகே குன்றத்தூர் மாதா பல் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து சேர்க்கை ஆணை பெற்றார்.  இதையொட்டி, பள்ளியில் தலைமையாசிரியர் சி.முதல்வன் தலைமையில் வியாழனன்று பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வி.ஏ.டி.சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார்.  வர்த்தக சங்க முன்னாள் தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கி.ரெ.பழனிவேல், த.முருகேசன், உதவித் தலைமை ஆசிரியர் சோழபாண்டியன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் ராஜப்பிரியா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.  இதில் ஆசிரியர்கள் சார்பில் ரூ.10 ஆயிரம், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சார்பில் ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.15 ஆயிரம் மாணவருக்கு கல்விக்கான உதவித்தொகையாக வழங்கப்பட்டது.

;