districts

தஞ்சை அரசு கொள்முதல் நிலையத்தில் விற்க கொண்டுவந்த வெளி மாவட்ட 10.5 டன் நெல் மூட்டைகள் பறிமுதல்

தஞ்சாவூர், செப்.11- தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், வெளி மாவட்டங்களில் இருந்து எடுத்து வந்து நெல் விற்பனை செய்யக் கூடாது என்ற உத்தரவு அமலில் உள்ளது.  இதனால் வியாபாரிகள், வெளி மாவட்ட நெல் மூட்டைகளை கொண்டு வந்து தஞ்சை  மாவட்ட நேரடி கொள்முதல் நிலையங்க ளில் விற்பனை செய்வதை தடுக்க குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினர் மாவட்ட எல்லைகளில் தீவிர  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்ற னர். இந்த நிலையில் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல்  துறை இயக்குனர் ஆபாஷ்குமார் உத்தர வின்பேரில், திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை  காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மேற்பார்  வையில், தஞ்சாவூர் சரக குடிமைபொருள் குற்றப் புலனாய்வு துறை டி.எஸ்பி. சரவ ணன் தலைமையில் தஞ்சாவூர் மாவட்ட  குற்றப்புலனாய்வு துறை உதவி ஆய்வா ளர் விஜய் மற்றும் காவல்துறையினர், தஞ்சை மாவட்ட எல்லையான கும்பகோ ணம் அருகே நீலத்தநல்லூர் சோதனைச் சாவடியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அரியலூர் மாவட்டத்தில் இருந்து வந்த லாரியை  நிறுத்தி சோதனை யிட்டனர். அதில் 10.5 டன் நெல் மூட்டை கள் இருந்தது. இது குறித்து லாரியில் இருந்தவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி னர். அதில், அவர்கள் அரியலூர் மாவட்டம்  சாத்தாம்பாடி வடக்கு தெருவை சேர்ந்த  வெற்றிமணி (22), அரியலூர் நாகமங்க லத்தை சேர்ந்த முருகேசன் (52) என்பது தெரியவந்தது.  மேலும் அவர்கள் வெளி மாவட்டத்தில் இருந்து விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை வாங்கி, தஞ்சாவூர்  மாவட்ட கொள்முதல் நிலையங்களில் அதிக விலைக்கு விற்க கொண்டு வந்த தும், டிரான்சீட் படிவம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள், பில்கள் முறையாக இல்லா ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நெல் மூட்டைகளோடு லாரியையும் பறிமுதல் செய்து திருநாகேஸ் வரம் அரசு நவீன அரிசி ஆலை நிர்வாகத்தி டம் ஒப்படைத்தனர்.  அங்கு வெற்றிமணி, முருகேசன் ஆகி யோரிடம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணி பக் கழக கும்பகோணம் மண்டல மேலா ளர்  இளங்கோவன் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

;