districts

பூதலூர் பகுதி விவசாயத்திற்கு கட்டளை வாய்க்காலில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் உறுதி

தஞ்சாவூர், செப். 14- தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் மற்றும் செங்கிப்பட்டி சரகம், புதுக்குடி வடபாதி கிராமம், தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம் உய்யக்கொண்டான் வாய்க்கால் மூலம்  வருகிறது. இந்த பாசனத்திற்கான தண்ணீர்,  சோழகம்பட்டி வாரியில் அமைந்துள்ள  சைபனில் ஏற்பட்ட நீர்கசிவு காரணமாக  வரவில்லை என தெரிவித்தும், பூதலூர்  வட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் சம்பா  சாகுபடி ஒருபோகம் மட்டுமே செய்து வருவதால் தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்க உத்தரவாதம் அளிக்க வலியுறுத்தியும், புதன்கிழமை காலை 8  மணியளவில் பூதலூர் சிபிஎம் ஒன்றியச்  செயலாளர் சி.பாஸ்கர் மற்றும் விவசா யிகள் சங்கம் சார்பில் சாலை மறியல்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந் தது.  இது தொடர்பாக காலை 11 மணியள வில், பூதலூர் வட்ட அலுவலகத்தில், வட்டாட்சியர் பெர்ஷியா தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற் றது. இக்கூட்டத்தில், சிபிஎம் பூதலூர் ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர், ஒன்றி யக் குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், வியாகுலதாஸ், பழனிச்சாமி மற்றும் விவசாயிகள் சங்கம் செபஸ்தியார் மற்றும் பவுல்ராஜ், செல்லபாண்டியன் உள்ளிட்ட 10 விவசாயிகள் கலந்து கொண்டனர். அரசுத் துறை சார்பாக திருச்சி மாவட்டம் ஆற்றுப் பாதுகாப்பு பிரிவு  உதவிப் பொறியாளர் எஸ். சதீஷ்,  செங்கிப்பட்டி காவல் உதவி ஆய்வா ளர் ரெத்தினசாமி, செங்கிப்பட்டி வரு வாய் ஆய்வாளர் ஜெனிபர், புதுக்குடி வடபாதி கிராம நிர்வாக அலுவலர், ஆகி யோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், “திருச்சி மாவட்டம்,  திருவெறும்பூர் வட்டம் வாழவந்தான் கோட்டை ஏரியிலிருந்து செல்லும் முதல்  நீட்டிப்பு வாய்க்காலின் வாயிலாக தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டத்திற் குட்பட்ட 15 ஏரிகளுக்கு தண்ணீர் வழங்கப் பட்டு வருகிறது.  மேற்படி முதல் நீட்டிப்பு வாய்க்கா லில் வாழவந்தான்கோட்டை கிராமத் தில் சோழகம்பட்டி வாரியில் உள்ள சைபனில் நீர்க்கசிவு ஏற்பட்டு தண்ணீர்  சோழகம்பட்டி வாரியில் கசிந்து செல்கிறது.

 இதனால், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 ஏரிகளுக்கு தண்ணீர் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சைபன் ஆனது சுமார் 70 வருடங்களுக்கு முன்பு கருங் கற்கள் கொண்டு கட்டப்பட்ட கட்டு மானம் என்பதால், இதனை தற்காலிக மாக சீரமைப்பது என்பது இயலாததா கும்.  எனவே முழுமையாக மறு கட்டு மானம் செய்யப்படும் பட்சத்தில் மட்டுமே விவசாயத்திற்கு தடையின்றி தண்ணீர் வழங்க இயலும். தற்போது  சம்பா சாகுபடி காலம் தொடங்கியிருப்ப தால், சைபனை உடைத்து சீர்செய்து தண்ணீர் வழங்கிட காலதாமதம் ஆகும்  என்பதாலும், நீர் கசிவினால் வெளியே றும் தண்ணீரை ஈடு செய்யும் வகையில் மாற்று ஏற்பாடாக கட்டளை வாய்க்கா லில் இருந்து தண்ணீர் வழங்கிட நீர்வளத் துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. மேலும், நிரந்தர தீர்வாக சைபனை சரி செய்து தர உரிய  மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு  அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ளப் படும் எனத் தெரிவிக்கப்பட்டது.  சம்பா சாகுபடி பாதிக்காத வகை யில் தண்ணீர் வழங்கப்படும் என ஆற்று  பாதுகாப்பு பிரிவு, உதவிப் பொறியாளர்  தெரிவித்ததை ஏற்று சாலை மறியல் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

;