districts

பண்டாரவடை நேரடி நெல் கொள்முதல் நிலைய அமைவிடத்திற்கு இணைப்பு சாலை வேண்டும் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

கும்பகோணம்,  டிச.22 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கோட் டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கோட் டாட்சியர் பூர்ணிமா தலை மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு  விவசாய சங்க பிரதிநிதி களும், விவசாயிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் பி.எம்.காதர்உசேன், முரளி ஆகியோர், “தஞ்சை மாவட் டம் பாபநாசம் வட்டம் பண்டாரவடையில் விவசாயி கள் பல கட்ட போராட்டம்  நடத்தியதன் அடிப்படை யில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமையவிருக்கிறது. அந்த கொள்முதல் நிலையம்  அமைவிடத்தில், விவசாயி கள் போக்குவரத்திற்காக இணைப்புச் சாலை அமைத் துத் தர வேண்டும். அதே போல், வேம்பக்குடியிலும் இணைப்பு சாலை அமைக்க வேண்டும். இதுபோன்ற விவ சாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை வெளிப்படை யாக அறிவித்து, சம்பந்தப் பட்ட விவசாய சங்கத்தின ருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்” என வலியுறுத்தி னார். தமிழ்நாடு காவிரி விவ சாயிகள் பாதுகாப்பு சங்க விவசாயிகள், பொங்கல் பண்டிகையின் பொது மக்களுக்கு வழங்கப்படும் செங்கரும்புகளுடன் வந்து,  “2023 பொங்கல் பண்டி கைக்கு  செங்கரும்பு, வெல்லம், தேங்காய் உள்ளிட்ட பொருட்களை கொள்முதல் செய்வது குறித்து தமிழக அரசு  இதுவரை எந்த அறிவிப்பை யும் வெளியிடவில்லை. இத னால் விவசாயிகள் ஏமாற்றம்  அடைந்துள்ளனர். ஒவ்வொரு குடும்ப அட்டை தாரர்களுக்கும் இரண்டு செங்கரும்புகளுடன் வெல்லம் மற்றும் தேங்காய் களை, இடைத்தரகர்கள் இல்லாமல் உள்ளூர் விவசா யிகளிடம் இருந்து கொள் முதல் செய்ய வேண்டும்” என கோரிக்கை வைத்தனர்.

;