பாபநாசம், மார்ச் 6- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திருப்பாலைத் துறை ஆப்தீன் மெட்ரிக் பள்ளியில் ஆண்டு விழா நடை பெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் காஜா முகைதீன் தலைமை வகித்தார். பொறுப்பாளர் சித்தார்த்தன் வர வேற்றார். பள்ளி முதல்வர் செல்வி, தாளாளர் (பொ) ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சின்னத்திரை நடிகை கிருத்திகா பங்கேற்று, யோகா போட்டி, சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். மேலும் மாணவர்களின் கலை நிகழ்ச்சி கள் நடந்தன.