districts

img

இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் அரசாணைகளை ரத்து செய்க! வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், டிச.2 -  ஒன்றிய, மாநில அரசுப் பணிகளில் தொகுப்பூதியம், ஒப்பந்த ஊதிய முறை களை முற்றிலும் கைவிட வேண்டும். ஒப்பந்த மற்றும் தொகுப்பு ஊதி யத்தில் பணியாற்றுபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.  தமிழக அரசின் அரசாணை எண்  115, 152 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர்  சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  இதையொட்டி, தஞ்சை மாநகராட்சி  அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாநகர துணைத் தலைவர் எம்.நாகராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆம்பல் துரை, ஏசு ராஜா விளக்கிப்  பேசினர். இதில், எம்.ஹரிஹரன், வி. லிங்கேஸ்வரன், எஸ்.வெங்கடேஷ், எஸ்.விக்னேஷ், எம்.சுகன், கே.வினோத் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.
திருச்சிராப்பள்ளி
திருச்சி மாநகர் மாவட்டக் குழு  சார்பில் திருச்சி மாநகராட்சி அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்டப் பொருளாளர் நவ நீதகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பா.லெனின் மற்றும் மாவட்டச் செயலாளர் சேதுபதி ஆகி யோர் விளக்கிப் பேசினர். 35-ஆவது  வார்டு மாமன்ற உறுப்பினர் சுரேஷ் வாழ்த்திப் பேசினார். மாவட்ட துணைச்  செயலாளர் சந்துரு நன்றி கூறினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் நகராட்சி அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு வாலிபர் சங்க மாவட்டத் தலை வர் எஸ்.கே.சரவணன் தலைமை  வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.எம்.சக்திவேல், மாவட்டப் பொரு ளாளர் அறிவழகன், துணைச்செய லாளர் கே.வேல்முருகன், மாவட்டச் செயற்குழு பி.துரை, எஸ்.பிரியா ஆகி யோர் விளக்கிப் பேசினர். மாவட்டச்  செயற்குழு என்.அருன், பி.சடை யப்பன், மாவட்டக்குழு எ.அஜித்குமார்,  கே.சிலம்பரசன், பி.வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;