districts

1400 கண்காணிப்பு கேமராக்கள்: கழுகுப் பார்வையில் தஞ்சை மாநகரம்

தஞ்சாவூர், நவ.26-  தஞ்சாவூர் மாநகரின் 51 வார்டுகளில் 1,400  கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் கட்டுப்பாட்டு அறை மாநகராட்சி அலுவல கத்தில் அமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்தது. கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் துவக்கி  வைத்து செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி  திட்டத்தின் கீழ் 51 வார்டுகளிலும் 3 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டது. இதில் முதற்கட்டமாக 1,400 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை மாநகராட்சி அலுவலகத்தில் 15  எல்இடி திரையில் 15 பேர் கொண்ட குழு வினர் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடு படுவர். இங்கு காவல்துறையினரும் சேர்ந்து  பணியில் இருப்பர். பழைய - புதிய பேருந்து நிலையம்,  முனிசிபல் காலனி ஆகிய மூன்று இடங்க ளில் ஸ்மார்ட் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சோலார் விளக்கு, இடிதாங்கி, சுழலும்  கேமரா, ஒலிபெருக்கி, வை-பை வசதி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இரு நடமாடும் வாகனங்க ளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத் தப்பட்டு கூட்ட நெரிசல் காலத்தில் பயன்படுத் தப்படும். சாலைகளில் ஏதாவது ஒரு விபத்து  ஏற்பட்டால் கேமரா மூலம் கண்காணித்து 108  ஆம்புலன்ஸை அனுப்பி சிகிச்சை மேற்கொள்ள முடியும். மாநகரில் உள்ள 17 மாநகராட்சி பள்ளி களின் வகுப்பறைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் நகரின் விரிவாக்க பகுதிகளிலும் கேம ராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. கூட்ட நெரிசலின்போது ட்ரோன் கேமராக்களும் பயன்படுத்தப்பட உள்ளன. மாநகரம் முழுவதும் கண்காணிப்பு கேம ராக்கள் பொருத்தப்பட்டு கழுகுப் பார்வை யில் கண்காணிக்கப்படுவதால் குற்றச் செயல்கள் குறைய வாய்ப்புள்ளது’’ என்றார். நிகழ்வில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி,  ஆணையர் க.சரவணக்குமார், மண்டலத் தலைவர்கள் புண்ணியமூர்த்தி, ரம்யா சர வணன், போக்குவரத்து ஆய்வாளர் எம்.ஜி. ரவிச்சந்திரன் மற்றும் மாமன்ற உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.

;