districts

img

காயமடைந்த நூறு நாள் வேலை தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எம்.சின்னத்துரை எம்எல்ஏ வலியுறுத்தல்

தஞ்சாவூர், ஆக.10 -  தஞ்சாவூர் மாவட்டம் பூத லூர் ஊராட்சியில் நூறு நாள் வேலையில், பாதுகாப் பின்றி பணி செய்த போது, படுகாயம் அடைந்த பெண் களுக்கு நிவாரணம் வழங்க  வேண்டும் என அகில இந்திய  விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத் துள்ளது.  கடந்த ஆக.8 அன்று, தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர்  கிராமத்தில் அரசுப் பள்ளி யில் நூறு நாள் வேலை செய்து கொண்டிருந்த போது, பள்ளி வளாகத்தில் இருந்து செப்டிக் டேங்க் இடிந்து மூன்று பேர் படு காயம் அடைந்தனர். இவர் கள் தஞ்சை மருத்துவக்  கல்லூரி மருத்துவமனை யில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்ற னர். மேலும், நான்கு பெண் கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த விபத்தில், ராஜேஸ் வரிக்கு இடது காது முழு மையாக துண்டிக்கப்பட்டது. மீனாம்பாளுக்கு இடது கால்  முறிவு ஏற்பட்டுள்ளது. ஆண்டாளுக்கு வலது கை யில் கடுமையான வெட்டுக் காயம் உள்ளது. அம்பிகா, லதா, பரிபூரணம், அன்பரசி ஆகிய 4 பேருக்கு கை, கால் மற்றும் நெஞ்சு பகுதி யில் அடிபட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸில் இவர்கள் கொண்டு வரப்பட்டு 7 மற்றும் 24 ஆம் வார்டுகளில் உள்நோயாளியாக சேர்க்கப் பட்டுள்ளனர்.  இந்நிலையில், அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் மாநிலச்  செயலாளரும், கந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப் பினருமான எம்.சின்னத் துரை, தஞ்சை மாவட்டச் செயலாளர்  கே.பக்கிரிசாமி, மாவட்டத் தலைவர் ஆர்.வாசு, மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.தமிழ்செல்வி ஆகியோர் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ள பெண் களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

மேலும், மருத்துவக் கல்லூரி முதல்வரைச் சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றி கேட்டறிந்து, உரிய சிகிச்சை அளிக்க  வேண்டும் என வலியுறுத்தப் பட்டது.   தொடர்ந்து அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர், எம்.சின்னத்துரை எம்எல்ஏ கூறுகையில், “ஆக.8 அன்று காலை 11 மணி அளவில் நடந்த சம்ப வத்திற்கு இதுவரை பூதலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்படவில்லை என்பது மிகுந்த கண்ட னத்திற்குரியது. உடனே வழக்குப் பதிய வேண்டும். மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக் கப்பட்ட அனைவருக்கும், அவர்கள் மருத்துவமனை யில் இருக்கும் நாட்களுக்கு நூறு நாள் வேலைக்கான சம்பளத்தை முழுமையாக வழங்க வேண்டும். முழுமை யாக பாதிக்கப்பட்ட அனைவ ருக்கும் நிவாரணம் வழங்க  வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள் கிறோம்” என்றார்.

;