சேலம், நவ.19- விடுதலை போராட்ட வீரர், தகை சால் தமிழர், மறைந்த மகத்தான தலைவர் தோழர் என்.சங்கரய்யா விற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியினர் புகழஞ்சலி செலுத்தினர். இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய 32 பேர் களில் ஒருவருமான தோழர் என்.சங்கரய்யா, கடந்த புதனன்று கால மானார். 102 வயது வாழ்க்கையை உழைப்பாளி மக்களின் நலனுக் கான செலவிட்டு, உழைக்கும் வர்க் கத்தை உயர்த்த பெரும் பங்காற்றி னார். தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, உழைப்பாளி, ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக் கையை தமிழக சட்டமன்றத்தில் கர் ஜித்தார். ஆனால், அவரது குரல் கடந்த புதனன்று நின்றது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவ ரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது இரங்கல் களை தெரிவித்து வருகின்றனர். அதன்ஒருபகுதியாக சேலம் சிறை தியாகிகள் நினைவகம் முன்பு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிபிஎம் மாவட் டச் செயலாளர் மேவை.சண்முக ராஜா தலைமை வகித்தார். இதில் திமுக மாவட்டச் செயலாளரும், சட் டமன்ற உறுப்பினருமான ரா.ராஜேந் திரன், மாநகரச் செயலாளர் ரகு பதி, காங்கிரஸ் மாவட்டத் தலை வர் ஏ.ஆர்.பி.பாஸ்கர், சேலம் மாநக ராட்சி மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் எம்.சாரதா தேவி, சிபிஐ மாவட்டச் செயலாளர் எ.மோகன், சிபிஎம் மாவட்ட செயற்குழு பி.ராம மூர்த்தி, எம்.குணசேகரன், திராவிட விடுதலைக் கழக மாவட்டத் தலை வர் டேவிட், மதிமுக மாவட்டச் செய லாளர் சங்கேஸ்வரன், சிபிஐ (எம்எல்) மோகனசுந்தரம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் துணைச்செயலாளர் காதர் பாட்ஷா, மாவட்டத் தலைவர் சையத் மூசா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் ஏ.அப்துல் ஜாபர் ஆகி யோர் இரங்கல் உரையாற்றினர். இதில் சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டு, சங்கரய்யாவிற்கு புக ழஞ்சலி செலுத்தினர். ஈரோடு ஈரோடு மாவட்டம், சத்தியமங்க லம் பழைய பேரூந்து நிலையம் முன்பு நடைபெற்ற இரங்கல் கூட் டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சத்தி தாலுகா செயலா ளர் கே.எம்.விஜயகுமார் தலைமை வகித்தார்.
இதில் திமுக நகரச் செய லாளரும், நகர்மன்ற தலைவரு மான ஆர்.ஜானகிராமசாமி, காங்கி ரஸ் மாவட்டத் துணைத்தலைவர் ஸ்ரீராம், நகரத் தலைவர் ச.ம.சிவக் குமார், முஸ்லீம் லீக் அஸ்கர் அலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சத்தி தெற்கு ஒன்றியச் செயலாளர் சுரேந் தர், அதிமுக நகர அவைத்தலை வர் நாராயணன், விசிக பொறுப்பா ளர் பொன்.தம்பிராஜன், தபெதிக திராவிட வீரன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நகரச் செயலா ளர் பி.வாசுதேவன், மூத்த தோழர் க. இரா.திருத்தணிகாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதே போல் மார்க்சிஸ்ட் கட்சியின் ஈரோடு தாலுகாவிற்குட்பட்ட பள்ளத்தூர் கிளை மற்றும் ஊனாத்திப்புதூர் ஏ,பி மற்றும் வெண்மணி கிளைகள் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேபோன்று பெருந்துறை புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய சங்கரய்யா மறைவு அமைதி ஊர்வலம் அண்ணா சிலை அருகில் நிறைவு பெற்றது. அங்கு நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பெருந்துறை தாலுகா செய லாளர் பி.முத்துபழனிசாமி தலைமை வகித்தார். திமுக திரு மூர்த்தி, அதிமுக ஜெகதீஷ்வரன், நாம் தமிழர் கட்சி லோகநாதன், சிபிஐ சின்னசாமி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி. பழனிசாமி, சி.பரமசிவம், மாவட்டக் குழு உறுப்பினர் வி.ஏ.விஸ்வநா தன், விவசாயிகள் சங்க தலைவர் கே.குப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.