districts

img

தமிழ்நாடு விவசாயிகள் சங்க போராட்டம் வெற்றி காவிரி - சரபங்கா நீரேற்ற திட்டத்தை நீரோடை வழியே அமலாக்க உறுதி

சேலம், நவ. 24- காவிரி-சரபங்கா நீரேற்றம் திட் டத்தை நீரோடை வழியே அமுல் படுத்தக் கோரி செவ்வாயன்று தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், மேட்டூர் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.டில்லிபாபு தலைமை தாங்கி னார். மாவட்ட செயலாளர் ஏ.ராம மூர்த்தி, மாவட்ட துணைத் தலை வர்கள் பி.தங்கவேலு, சிபிஎம் ஒன்றி யக்குழு செயலாளர் எஸ்.வசந்தி, இத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவ சாயிகள் என பலர் கலந்து கொண் டனர்.

அதில், காவிரி-சரபங்கா நீரேற் றம் திட்டத்தை விளைநிலத்தில் அமலாக்காமல், நீரோடை வழியே அமல்படுத்த வேண்டும். நிலம் ஆர் ஜிதம் பெயரில் விவசாயிகளை மிரட்டக் கூடாது என்ற கோரிக்கை களை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதனைத்தொடர்ந்து, மேட்டூர் சார்-ஆட்சியரை சந்தித்து 31 கேள் விகள் அடங்கிய மனுவை விவசா யிகள் சங்கத்தினர் அளிக்க முயற்சி செய்தனர். இதற்கு மறுப்பு தெரி வித்த காவல் துறையினர் அவர் களை தடுத்து நிறுத்தியதால் விவ சாயிகளும், விவசாய சங்க நிர்வாகி களும் தரையில் அமர்ந்து மறிய லில் ஈடுபட்டனர். இதனால், அப்பகு தியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவி யது.

 இதனையடுத்து, மேட்டூர் சார்  ஆட்சியர் சரவணன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் விளை நிலங்கள் பாதிக்காமல் நீரோடை வழியே இத்திட்டத்தை அம லாக்குகிறோம். மாவட்ட ஆட்சியரி டம் நீங்கள் அளித்த ஆட்சேபனை விண்ணப்பங்கள் மீது ஊராட்சி வாரி யாக நவ.26 ஆம் தேதி முதல் நேர்முக விசாரணையும், கருத்துக்கேட்பும் நடத்திட உள்ளோம் என உறுதியளித் தனர். இதைத்தொடர்ந்து, போராட் டம் தற்காலிமாக ஒத்திவைக்கப்பட் டதன் அடிப்படையில் கலைந்து சென்றனர்.

;