districts

img

சிபிஎம் மூத்த தலைவர் காலமானார்

சேலம், மார்ச் 6- சேலம் மார்க்சிஸ்ட் கட்சியின் முன் னணி தோழர் கந்தசாமி காலமானார். சிபிஎம் கட்சியின் சேலம் மாநகர கிழக்கு சுபாஷ் சந்திர போஸ் நகர் கிளை  மூத்த நிர்வாகியும், முன்னணி தோழரு மான ஆர்.கந்தசாமி (58) உடல் நலக் குறைவால் திங்களன்று காலமானார். மறைந்த தோழர் கந்தசாமி, மார்க்சிஸ்ட் கட்சியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக களப்பணியாற்றியவர். மக்கள் கோரிக்கைக்கான இயக்கங் களை தொடர்ந்து முன்னெடுத்தவர். பல கொலை மிரட்டல்கள் தாக்குதல்கள் வந்த போதும், கட்சியின் கொள்கை பிடிப்போடு நின்று எதிர்கொண்டவர். இவரது மறைவிற்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் மாவட் டக்குழு சார்பில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர். வெங்கடபதி, பி.ராமமூர்த்தி, எம்.குணசேகரன், கிழக்கு மாந கர செயலாளர் பொன். ரமணி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.