districts

img

பிஎஸ்என்எல்க்கு 4ஜி சேவை வழங்க வேண்டும். பிஎஸ்என்எல் எம்ப்ளாயீஸ் யூனியன் மாநாட்டில் தீர்மானம்

பிஎஸ்என்எல் எம்ப்ளாயீஸ் யூனியன் சேலம் மாவட்ட பத்தாவது மாவட்ட மாநாடு ஒய்எம்சிஏ அரங்கத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக தேசிய  கொடியை பொது மேலாளர் கே. சித்ரசேனன் ஏற்றி வைத்தார். சங்க கொடியை மாவட்ட பொருளாளர் பி. தங்கராஜ் ஏற்றிவைத்தார். அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட உதவி செயலாளர் சண்முகம் முன்மொழிந்தார். மாவட்ட செயலாளர் இ. கோபால் வரவேற்புரையாற்றினார்.

மாநாட்டை மாநில செயலாளர் பாபு ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். அகில இந்திய உதவி பொது செயலாளர் செல்லப்பா சிறப்புரையாற்றினார். அதன் பின்பு நடைபெற்ற கருத்தரங்கத்தில் பிஎஸ்என்எல் சேலம் பொது மேலாளர் டாக்டர். சி. பி.சுபா, துணை பொது மேலாளர் பாஸ்கரன், பிஎஸ்என்எல் அதிகாரிகள் நாகராஜன், எஸ். ரூபன் விஜய சிங் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினார்.

மாநாட்டில் பணி நிறைவு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

மாநாட்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு நிபந்தனையின்றி 4-ஜி சேவை வழங்க வேண்டும், ஊழியர்களுக்கு மூன்றாவது ஊதிய மாற்றம் மற்றும் ஓய்வூதிய மாற்றம வழங்க வேண்டும், தேசிய பணமாக்கள் திட்டத்தின் மூலம் பிஎஸ்என்எல் கேபிள்களை குத்தகைக்கு விடுவது கைவிடவேண்டும்,

செல்போன் கோபுரங்களை தனியாருக்கு கொடுக்கக்கூடாது, ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவை இன்றி ஊதியம் வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யக்கூடாது எனவும், பொதுத்துறைகளை பாதுகாக்க வலியுறுத்தி அகில இந்திய அளவில் பிப்ரவரி 23, 24 தேதிகளில் நடைபெறும் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக பிஎஸ்என்எல் ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்பார்கள் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்ட செயலாளராக இ.கோபால் மாவட்ட தலைவர் எஸ். ஹரிஹரன் மாவட்ட பொருளாளராக எம். சண்முகம் உள்ளிட்டு 19 பேர் கொண்ட நிர்வாகக் குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநாட்டின் நிறைவாக மாவட்ட அமைப்பு செயலாளர் பி.செல்வம் நன்றியுரையாற்றினார்.

;