districts

img

வாலிபர் சங்க சைக்கிள் பிரச்சாரம் கிராமங்கள் தோறும் உற்சாக வரவேற்பு

மதுராந்தகம்,ஏப்.26- இளைஞர்களுக்கு வேலை கேட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில்  நடைபெற்று வரும் சைக்கிள் பிரச்சார பயணத்திற்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் மூன்றாவது நாளாக உற்சாகமாக வரவேற் பளிக்கப்பட்டது ஒன்றிய, மாநில அரசு துறைகளில் உள்ள  காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் குறைந்தபட்ச மாத ஊதியம்  21,000 என சட்டம் இயற்ற வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்  மாநிலச் செயலாளர் எஸ்.பாலா  தலைமையில் சென்னையில் இருந்து துவங்கிய சைக்கிள் பிரச்சார குழுவினர் மூன்றாவது நாளாக செங்கல்பட்டு மாவட்டத் தில் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். செவ்வாயன்று (ஏப் 26) சோத்துப்பாக் கத்தில் துவங்கிய பிரச்சாரத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சித்தாமூர் பகுதி குழு சார்பில் பகுதி செயலாளர் சத்திய மூர்த்தி தலைமையில் வான வேடிக்கை யுடன் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட் டது. இதனைத் தொடர்ந்து பொறையூர் ஊராட்சியில் சங்கத்தின் சார்பில் அமைக்கப் பட்டிருந்த சங்கத்தின் கொடி மற்றும் கல்வெட்டை மாநிலச்  செயலாளர் எஸ்.பாலா  திறந்து வைத்தார்.

பொறையூர் ஊராட்சி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் எழுச்சி மிகு வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து,அச்சரப்பாக்கம் பேரூராட்சி அலுவலகம் அருகில் வாலிபர் சங்கத்தின் அச்சரப்பாக்கம் ஒன்றியக் குழுவின் சார்பில் ஒன்றிய துணைத் தலைவர் ஆனந்த ராஜ் தலைமையில் குளிர்பானம், பழங்கள் கொடுத்து வரவேற்பளித்தனர்.  வாலிபர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் ம.பா.நந்தன், மாவட்டத் தலைவர் க.ஜீவானந்தம், மாவட்டச் செயலா ளர் க.புருஷோத்தமன், மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆனந்த்ராஜ், மாவட்ட செயலாளர் மு. தமிழ் பாரதி உள்ளிட்ட நிர்வா கிகள் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்திற்குள் நுழைந்த பிரச்சாரக் குழுவினர் திருச்சியை நோக்கி தொடர்ந்து பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

;