districts

தொழிற்சங்க நடவடிக்கையில் நிர்வாகம் குறுக்கீடக் கூடாது யமஹா மோட்டார் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை,அக்.13- இந்திய யமஹா மோட்டார் பிரைவேட் லிட் நிறுவனத்தில் பணியாற்றும் 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 3 தினங்களாக வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.   2018 ல் வேலை நிறுத்தம்  நடந்த  போது , மாவட்ட ஆட்சியர் , தொழி லாளர் துறை அதிகாரிகள் முன்னி லையில் நடந்த பேச்சுவார்த்தை யில் கண்ட உடன்பாட்டின்படி , 2019, 2021 மார்ச் வரையிலான காலத்தில் இந்தியா யமஹா மோட்டார் தொழிலாளர் சங்கத்தின்  ஊதிய உயர்வு ஒப்பந்தம்  ஏற்பட்டது.  தற்போது 2 வது ஊதிய உயர்வு  ஒப்பந்த காலத்தில் நிர்வாகம் போட்டி சங்கத்தை உருவாக்கி உள்ளது. பதிவு செய்யப்பட்ட 3  நாட்களில் ஒப்பந்தத்திற்கான ஏற்பாடுகளை  நிர்வாகம் மற்றும்  போட்டி சங்கத்தினர் செய்வதும் அதற்கு இந்தியா யமஹா மோட்டார் தொழிலாளர் சங்க  உறுப்பினர்களிடம் கட்டாயப் படுத்தி , அச்சுறுத்தி கையெழுத்து பெறுவதும் நடைபெறுகிறது. எனவேதான் நிர்வாகத்தை கண்டித்து  வேலை நிறுத்தம் நடை பெற்று வருகிறது.  இந்த நிலையில் அக் .13 அன்று  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தொழிலாளர் துறை  துணை ஆணையர் முன்னிலையில்   பேச்சுவார்த்தை நடந்தது.

தொழிற்சங்கம் சார்பில் அ.சவுந்தரராசன், எஸ். கண்ணன்,  இ.முத்துக்குமார், டி.பிரகாஷ்,  சங்கர், தமிழ் அழகன் ஆகியோரும் ,  நிர்வாகத் தரப்பில் மனிதவள அதிகாரிகளும் பங்கேற்றனர். போட்டி சங்க கலாச்சாரம் ஒழிக்கப் பட வேண்டும். ஜனநாயக முறைப் படி தொழிற்சங்கம் நடைபெறு வதில் நிர்வாகம் குறுக்கீடக் கூடாது, சங்கத் தலைமையை மறை முக வாக்கெடுப்பு மூலம்  நடத்த வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டது. மீண்டும் அக்.15அன்று பேச்சு வார்த்தை நடத்துவது என்றும்   தொழிற்சங்கத்தின் கோரிக்கைகள் மீது தீர்வு காண நிர்வாகம் முன்வர வேண்டும் என்றும் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டது. வேலை  நிறுத்ததை கைவிட தொழிற் சங்கத்திடம் வலியுறுத்தப் பட்டது.  உதிரியாக  நிறுவனத்தொழி லாளர்கள் நடத்த இருந்த ஆதரவு  போராட்டங்களை கைவிடுகிறோம்  என உறுதி அளிக்கப்பட்டது. மற்ற படி வேலை நிறுத்தம் தொடரும்  என்றும் அடுத்த பேச்சு வார்த்தை யைத் தொடர்ந்து இதுகுறித்து முடிவு செய்யப்படும் என்றும் சிஐடியு மாநில தலைவர் அ.சவுந் தரராசன் ஒரு அறிக்கையில் தெரி வித்துள்ளார்.

;