பல்வேறு துறைகளில் ஐடிஐயில் பயின்றவர்களுக்கு தொழிற்பயிற்சி(அப்ரெண்டிஸ்) இடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ரயில்வே - 5647 இடங்கள் - கடைசித்தேதி 03.12.2024 அணு எரிபொருள் வளாகம் - 300 இடங்கள் - கடைசித்தேதி 25.11.2024 பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் - 150 இடங்கள் - கடைசித்தேதி 06.12.2024 தமிழ்நாடு பொதுப்பணித்துறை - 760 இடங்கள் - கடைசித் தேதி 31.12.2024 ரயில்வே 5 ஆயிரத்து 647 தொழிற்பயிற்சிப் பணியிடங்களை ரயில்வே நிரப்புகிறது. இதில் ஓராண்டு காலத்திற்குப் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்காலத்தில் ரயில்வே விதிமுறை களின்படி உதவித்தொகை தரப்படும். தகுதியானவர்கள் www.nfr.indianrailways.gov.in என்ற இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை நிரப்புவதற்கான கடைசித் தேதி டிசம்பர் 3, 2024 ஆகும். கூடுதல் விபரங்களுக்கும் இந்த இணையதளத்தைப் பார்வையிடலாம்.
அணு எரிபொருள் வளாகம்
ஐதராபாத்தில் இருந்து இயங்கும் இந்த வளாகம் ஒன்றிய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் இயங்குகிறது. இதில் 300 தொழிற்பயிற்சி இடங்களை நிரப்பப் போகிறார்கள். எலக்ட்ரிசியன் பணிக்கு மட்டும் நேர்காணல் நடத்தப்படும். மற்ற இடங்களுக்கு விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதியின் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். இதற்கான கூடுதல் விபரங்களை https://www.nfc.gov.in/ என்ற இணையதளத்தில் பார்வையிடலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள் நவம்பர் 25, 2024 ஆகும். பாரத் டைனமிக்ஸ் இது இந்திய ராணுவத்தின் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனமாகும். இதில் ஓராண்டு காலத்திற்கு பயிற்சி வழங்கப்படும். ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கக்கூடாது. பயிற்சியில் சேருபவர்களுக்கு விதிமுறைகளின்படி உதவித்தொகை கிடைக்கும். ஆன்லைனில் www.bdl-india.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் நிரப்பலாம். நிரப்பிய விண்ணப்பத்தை தபால் மூலமாக டிசம்பர் 6, 2024 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி The Manager (HR), Apprentice, Bharat Dynamics Limited, Kanchanbagh, Hyderabad - 500 058
தமிழக பொதுப் பணித்துறையில் வேலை
பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத 760 தொழிற்பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஓராண்டுக் காலம் இதில் பயிற்சி அளிக்கப்படும். 2020, 2021, 2022, 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு தகுதியானவர்களாவர். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் தேவைப்படும் துறைகளில் பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு படித்திருக்க வேண்டும். பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பயிற்சி காலத்தில் ரூ. 9 ஆயிரம், பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கு பயிற்சிக் காலத்தில் ரூ. 8 ஆயிரம் மற்றும் பொறியியல் அல்லாத பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பயிற்சிக் காலத்தில் ரூ. 9 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.nats.education.gov.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தொழிற்பயிற்சி குறித்த முழு விவரங்களை http://boat-srp.com/ என்ற இணையதள முகவரியில் பார்வையிடலாம். நவம்பர் 25, 2024 அன்று விண்ணப்பம் நிரப்புவது தொடங்குகிறது. டிசம்பர் 31, 2024 அன்று இதற்கான கடைசித் தேதியாகும்.