சென்னை. ஜூன் 24-
உலக அளவில் புதுமைமிக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான விவோ தனது ஒய் மாடல் ஸ்மார்ட்போன் வரிசையில் புதிதாக ஒய்36 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
கண்ணாடி போன்று அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போன் மிகவும் மெல்லியதாக உள்ளது.
இதனால் இதை கைகளில் எளிதாக பிடிக்க முடியும். இதில் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட், 8ஜிபி நீட்டிக்கப்பட்ட ரேம், மிகப்பெரிய 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 44 வாட்ஸ் பிளாஷ் சார்ஜ் ஆகியவை இதில் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட், விவோ இந்தியா இ–ஸ்டோர் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள செல்போன் விற்பனையகங்களில் 16,999 ரூபாய்க்கு 8ஜிபி மற்றும் 128ஜிபி மெமரி கார்டுடன் கிடைக்கும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.