districts

சி.வி.சண்முகத்தின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது ஏன்? உயர் நீதிமன்றத்தில் காவல் துறை விளக்கம்

சென்னை, மார்ச் 23- அதிமுக எம்.பி சி.வி.சண்முகத்துக்கான பாதுகாப்பை மறு ஆய்வு செய்தபோது, அவருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பது தெரிய வந்தது. அதன் அடிப்படை யில் அவருடைய பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதாக சென்னை உயர்  நீதிமன்றத்தில் காவல் துறை தெரிவித் துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக  முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.பியுமான சி.வி.சண்முகம் கடந்த ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில், “கடந்த 2006 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அன்று,  என் வீட்டில் நுழைந்த மர்ம கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியதில், எனது மைத்துனர் கொல்லப்பட்டார். அதன்பின் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால், கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திடீரென அந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. எனது துப்பாக்கி உரிமத்தையும் புதுப்பித்து  தரவில்லை. இதற்கான காரணம் தெரிவிக்கப் படவில்லை என தெரிவித்திருந்தார். இந்த  வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ெஜயசந்திரன் முன்பு வியழானன்று (மார்ச் 23) விசா ரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை  சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாபு முத்து  மீரான், “சி.வி.சண்முகத்துக்கான பாதுகாப்பை மறு ஆய்வு செய்தபோது, அவருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பது தெரிய வந்தது. அதன் அடிப்படை யில் அவருடைய பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது” என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, சி.வி.சண்முகத்தின் பாதுகாப்பு தொடர்பாக எடுக்கபட்ட நடவடிக்கை குறித்த  நிலை அறிக்கையை தாக்கல் செய்ய காவல்  துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 27 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்

;