கொரோனா வைரஸ் மற்றும் ஒமைக்ரான் நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்த சூழ்நிலையில் தடுப்பூசிக்கான தேவை, பூஸ்டர் டோஸ், குழந்தைகளுக்கான தடுப்பூசி போட வேண்டும் என ஒன்றிய அரசு தொடர்ந்து அறிவிப்பு விடுத்து வருகிறது. இந்த நிலையில் ரூபாய் 300 கோடி நிதி ஒதுக்கினால் முழுத் தேவைக்கான தடுப்பூசிகளையும் தயாரிக்க முடியும் என்ற நிலையில் உள்ள செங்கல்பட்டு எச்பிஎல் மையத்தின் தற்போதைய நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. செங்கல்பட்டு நகருக்கு அருகில் திருக் கழுக்குன்றம் வட்டம் திருமணி கிராமத்தில், ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான எச்பிஎல் தடுப்பூசி தயாரிக்கும் மையம் அமைக்கப்பட்டது. ரூபாய் 600 கோடி மதிப்பில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகமாக இது அமைந்துள்ளது.
2017ஆம் ஆண்டு கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு உலகத் தரத்திலான நவீன கருவிகள் பொருத்தப்பட்ட இந்நிறுவனத்தில் திரவ பென்டாவேலண்ட் தடுப்பூசி (எல்பிவி), தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி, ஹெபடைடிஸ் பி தடுப்பூசி, (எல்பிவிக்கு 40 எம்.டி.எஸ் மோனோவெலண்ட் 10 100 எம்.டி.எஸ்). ``ஹீமோ பிலஸ் இன்ஃப்ளூயன்ஸா வகை பி. ரேபிஸ் தடுப்பூசி, ஜப்பானிய என்செபாலிடிஸ் மின் தடுப்பூசி, பி.சி.ஜி தடுப்பூசி உள்ளிட்ட உயிர் காக்கும் 13 வகையான மருந்துகள் தயாரிக்கும் வகை யில் அமைக்கப்பட்டு அதற்கான ஆய்வு தள வாடங்கள் அனைத்தும் உலகத் தரத்தில் நிறுவப்பட்டு தடுப்பூசிகள் தயாரிக்கும் வைகையில் தயார் நிலையில் இருந்த போதிலும், போதிய நிதி ஆதாரம் கிடைக்கப் பெறாமல் உற்பத்தியை துவங்காமல் இந்நிறுவனம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தொடர்ந்து மக்கள் பணம் வீணாக்கப்படு வதை தடுக்கவும், நிறுவனம் கேட்கும் நிதியை ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி தயாரிக்க அரசு முன்வரவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்,
இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் போராட்டத்தை முன்னெடுத்து தொடர்ந்து போராடி வரு கின்றன. இந்த நிலையில், தொடர்ந்து 2020 மார்ச் மாதம் முதல் கொரோனாவின் முதல் அலை நாட்டை முடக்கியது. பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அப்போதும் கூட தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்நிறுவனத்தை துவக்க வலியுறுத்தி தொடர் முழக்கமிட்டு வந்தனர். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதியதாக பொறுப்பேற்ற திமுக அரசு இந்த மையத்தில் தொடர்ந்து உற்பத்தியை நடத்த முயற்சிகள் மேற்கொண்டது. கொரோனாவுக்கான தடுப்பூசி மட்டுமல்லாமல் மேலும் 13 வகை யான தடுப்பூசிகள் உற்பத்தி செய்திட தயார் நிலையில் இருக்கும் இந்நிறு வனத்திற்கு அனுமதி வழங்காமல் ஒன்றிய அரசு மக்கள் பணத்தை வீணடித்து வரு கிறது. ஆசியாவில் உள்ள மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி செய்யும் பொதுத்துறை நிறுவனமான எச்பிஎல்லை துவக்க நிலையிலேயே ஒன்றிய அரசு முடக்கியுள்ளது. இந்நிறுவனத்தை ஆய்வு செய்த அப்போதைய ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து மாற்றம் செய்யப்பட்டார். இதேபோன்று இந்நிறு வனத்தில் ஏதாவது ஒரு முன்னேற்றம் செய்ய வேண்டும் என நினைக்கும் தலைமை இயக்குநர், இயக்குநர்கள் போன்றவர்களை உடனடியாக இடமாற்றம் செய்வதுடன் எந்த ஒரு முடிவும் எடுக்க விடாமல் ஒன்றிய அரசு பார்த்துக் கொள்கின்றது.
ஒன்றிய அரசின் இந்த உள்நோக்கம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இந்த நிறுவனம் விரைவில் அரசு தனியாரிடம் ஒப்படைக்க உள்ளதால் ஊழி யர்கள் மாற்று பணிக்கு செல்லுங்கள் இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதி காரியே கூறிவருவதும் குறிப்பிட தக்கது. இனிவரும் காலங்களில் நாடு களுக்கிடையே ஆயுதம் ஏந்திய போரா ட்டத்திற்கு பதிலாக பயோ வாரைத் தான் எதிர்கொள்ள நேரிடும். எதிர்காலங்களில் நம் நாடு இதுபோன்ற பயோ வார்களை எதிர்கொள்ள எச்பிஎல் போன்ற தடுப்பூசி உற்பத்தி மையங்களும், ஆராய்ச்சி மையங்கள் அவசியமாகும். ஆகவே இந்த நிறுவனத்தை பாதுகாப்புத் துறையின் கீழ் கொண்டுவந்து ஆராய்ச்சி மற்றும் தடுப்பூசி உற்பத்திகளை செய்ய வேண்டும் அது நமது நாட்டிற்கு தற்போதைய தேவை யாகும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மக்கள் வரிப்பணத்தில் கட்டிய பொதுத்துறை நிறுவனமான எச்பிஎல் தடுப்பூசி மையத்தை மருந்து உற்பத்திக்கு வராமல் ஒன்றிய பாஜக அரசு பார்த்துக் கொள்கிறது. அனைத்து பொதுத் துறை நிறுவனங்களையும் தனியாருக்கு தாரை வார்த்து வரும் ஒன்றிய பாஜக அரசு, இந்த நிறுவனத்தையும் தனியாருக்கு விற்பனை செய்ய முயற்சித்து வருகிறது. க.பார்த்திபன்