districts

img

நூறு நாள் வேலையில் சம்பள பாக்கி

திருவள்ளூர், அக். 12- நூறு நாள் வேலை திட்டத்தில் 3 மாதமாக நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் புதனன்று (அக் 11),  பெரியபாளையம் பேருந்து நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி  சட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாய  தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து  ஒன்றி யங்களிலும் நூறு நாள் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கி நிறைய உள்ளது. இதனை உடனடியாக வழங்க வேண்டும், பணித்தள பொறுப்பாளர்களை சுழற்சி முறையில் பணியமர்த்த வேண்டும், விண்ணப்பித்த அனைவருக்கும் வேலை அட்டைகளை வழங்க வேண்டும்,  பல்வேறு இடங்களில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் ஊத்துக்கோட்டை வட்டத் தலைவரும், மாளந்தூர் ஊராட்சி மன்ற தலைவருமான வி.விஜயன் தலைமையில் நடைபெற்ற  போராட்டத்தில்  மாநில பொதுச் செயலாளர்  வி.மாரியப்பன், மாவட்டத் தலைவர் இ.தவமணி, பொருளாளர் என்.கங்காதரன், வட்டார செயலாளர் பி.அருள்,  மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.பத்மா, சிபிஎம் வட்டச் செயலாளர் ஏ.ஜி.கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் பி.ரவி உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.  இதே கோரிக்கை களை வலியுறுத்தி சோழவரம் ஒன்றியம் அருமந்தை கனரா வங்கி முன்பு நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு சோழவரம் பகுதி தலைவர் சி.மனோகரன் தலைமை தாங்கினார், இதில் மாவட்டச் செயலாளர் அ.து.கோதண்டன், துணை நிர்வாகிகள் செந்தில்குமார், ஜெயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். ஞாயிறு கிராமத்தில் உள்ள கனரா வங்கி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சோழ வரம் ஒன்றிய செயலாளர் டி.சரளா தலைமை  தாங்கினார். இதில் ஞாயிறு ஊராட்சி மன்றத்  தலைவர் ஜி.வி.எல்லையன்,  மாவட்ட குழு உறுப்பினர் மனோன்மணி ஆகியோர் பேசினர்.இதில் ஏராளமான பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.