districts

img

ஏரி மண் எடுப்பதில் விதிமுறைகள் மீறல் தனியார் ஒப்பந்த நிறுவனம் மீது ஆட்சியரிடம் சிபிஎம் தலைவர்கள் புகார்

விழுப்புரம், மார்ச் 15- விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்டது கூட்டேரிப்பட்டு. இந்த ஊராட்சி மன்றத்தில் சர்வே எண்.67-ல் சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது ஏரி.  இந்த ஏரியின் பாசனத்தை நம்பிதான் 1,500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவ சாய நிலத்தில் நெல் சாகு படி செய்கின்றனர். இந்த நிலையில், கூட்டேரி பட்டில் மேம்பாலம்-தேசிய நெஞ் சாலை பணிகள் நடைபெற்று வரு கிறது. இந்த பணிகளை செய்து வரும் டிடிகே என்கிற தனியார் நிறுவனம், கூட்டேரிப்பட்டு ஏரியி லிருந்து மண் எடுப்பதற்காக அரசின் அனுமதியை பெற்றுள்ளது. ஆனால், அந்த நிறுவனம் அரசின் விதிமுறைகளை முற்றிலும் மீறி வருவதாக ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் கூட்டேரிப்பட்டு ஏரிக்கு சென்று பார்வையிட்டனர். பிறகு செய்தி யாளர்களை சந்தித்தனர். அப்போது கூறியதாவது:- ஏரியில் 90 மீட்டர் நீளம், 70 மீட்டர் அகலம், 1 மீட்டர் ஆழத்தில் 6,300 அடிக்கு மட்டுமே மண் எடுப்பதற்கு அரசு அனுமதி வழங்கி யுள்ளது. ஆனால், 3 மீட்டர் முதல் 5 மீட்டர் (15 அடி ஆழம்) வரையிலும் மண் எடுத்துள்ளனர். அதே போல் நீளம், அகலமும் அனு மதிக்கப்பட்டதைவிட பல மடங்கு எடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி, 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளம் தோண்டியுள்ளனர். மேலும் குடியிருப்பு, ஏரிக்கரை, ஏரி வழி யாக செல்லும் மின் வழிப்பாதை பாதுகாப்பு ஆகியவற்றிற்கு 300 அடி இடைவெளி விடவேண்டும் என்பதும் மீறப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், எதிர் வரும் காலங்களில் ஏரியை நம்பி யிருக்கும் விவசாயிகள் பாதிக்கும் நிலை ஏற்படும்.

அதிக ஆழத்தில் தேங்கி இருக்கும் தண்ணீரில் மேய்ச்சலுக்கு செல்லும் மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் அபாய மும் உள்ளது. மேலும் அதனை காப்பாற்ற செல்லும் மாடு, ஆடு மேய்ப்பவர்கள், உரிமை யாளர்களும் பாதிக்கப்படுவார்கள். மேலும், ஏரியில் படிந்துள்ள இயற்கை சத்து நிறைந்த வண்டல் மண் விவசாயிகளுக்கு வழங்காமல் வெளி நபர்களுக்கு விற்பனை செய்து வருவதுடன், சட்டவிரோதமாக அல்லப்படும் பார் வகை மண் தனி நபர் இடங்க ளில் குவியல் குவியலாக மறைமுக விற்பனை செய்து வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலை பணிக்காக மண் எடுப்பதில் தனி யார் நிறுவனம் அப்பட்டமாக அரசின் விதிமுறைகளை மீறி யுள்ளது. இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, ஏரியில் மண் எடுக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி தலைமையில் மயிலம் ஒன்றியச் செயலாளர் ஜி.ராஜேந்திரன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.குமார் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் பழனியை சந்தித்தும் கோரிக்கை மனு கொடுத்தனர்.

;