உளுந்தூர்பேட்டை, ஜூன் 9 -
மனைப் பட்டா வழங்கப்பட்டு 30 ஆண்டு களுக்கு மேலாகியும் கிராம கணக்கில் ஏற்றாமல் ஏமாற்றி வரும் அதிகாரிகளை கண்டித்தும், கிராம கணக்கில் ஏற்றி பட்டா நகல் வழங்கக் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவ லூர் ஒன்றியத்தைச் சேர்ந்த விஜயங் குப்பம், களத்தூர் ஆகிய கிராமங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் ஆதி திராவிட மக்களுக்கு இலவச மனைப் வழங்கப்பட்டது.
ஆனால், இதனை கிராம கணக்கில் ஏற்றி பட்டா வழங்கவில்லை. இதனால் கிராம மக்களுக்கு மின்சாரம் உள்ளிட்ட அரசின் எந்த சலுகைகளையும் பெற முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பலமுறை மனு அளித்தும் மேல் நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக இருந்தனர். எனவே, ஜூன் 9 வெள்ளியன்று சேந்தநாடு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்.வேல்முருகன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் டி.எம்.ெஜய்சங்கர், செயற்குழு உறுப்பினர் வி.சாமிநாதன், ஒன்றியச் செயலாளர் ெஜ. ெஜயக்குமார் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஏ.சக்தி, ஏ.தேவி ஆகியோர் உரையாற்றினர். ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் ஏ.குடியரசுமணி, எம்.வி.ஏழுமலை, டி.ராஜீவ்காந்தி, ஜி.தாமோதரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
போராட்டத்தின் முடிவில் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலு வலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பட்டாக்கள் திருத்தம் செய்யப்பட்டு கிராம கணக்கில் ஏற்றப்பட்டுள் ளதாகவும் வரும் 25ஆம் தேதி பட்டா நகல் வழங்கப்படும் என்று உறுதியளித்தனர்.