சென்னை, ஜூன் 22-
இந்தியாவின் நகர எரிவாயு விநியோக நிறுவனங்களில் ஒன்றான ஏஜி&பி பிரதம் நிறுவனம் ரெட்ரோ சோன்’ என்ற பெயரில் தனது பிரத்யேக மறுசீரமைப்பு மையத்தை தமிழகத்தில் திறந்துள்ளது.
இந்த நிதி ஆண்டின் இறுதிக்குள் நாடு முழுவதும் மேலும் 5 மையங்களை திறக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மறுசீரமைப்பு மையத்தின் முக்கிய பணியானது தற்போது பெட்ரோல், எல்பிஜி அல்லது டீசல் ஆகியவற்றில் இயங்கும் வாகனங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட சிஎன்ஜி சாதனங்களை வழங்கி அந்த வாகனங்களை அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு என்னும் சிஎன்ஜி வாகனங்களாக மாற்றுவதாகும்.
இந்த மறுசீரமைப்பு முறை மூலம், வழக்கமான எரிபொருட்களில் அதாவது பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்டவற்றில் இயங்கும் வாகனங்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் புதிய சிஎன்ஜி வாகனத்தை வாங்காமல், குறைந்த செலவில் சிஎன்ஜி முறைக்கு மாற முடியும் என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அபிலேஷ் குப்தா ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இந்நிறுவனத்தின் ரெட்ரோ சோன் ஒரகடம் – -ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் சென்னை – பெங்களூர் வழித்தடத்தில் அமைந்துள்ளது.