சென்னை,ஜன.31- ஆவின் நிறுவனம் உதயமான1.2.1981 தினத்தையொட்டி பிப்ரவரி மாதம் முழுவதும் தமிழ்நாடு பால்உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு இணையம், மாவட்ட ஒன்றியங்கள் மற்றும் தொடக்க பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. நுகர்வோர்களுக்கு சமையல் போட்டி, பால்உற்பத்தியாளர்களின் குடும்பத்தி னருக்கு பல்வேறு போட்டிகள், ஆவின் சமூகவலைத்தளங்களில் ஆவின் பால் மற்றும் பால் உபப்பொருட்கள் சம்பந்த மான ஓவியம் , விளம்பரம் வடிவமைத்தல், குறும்படம் போன்ற போட்டிகள் நடத்தி அதில்வெற்றியாளர்கள், சிறந்த பதிவாளர்களை தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்பட உள்ளது. அதிகளவில் தொடர்ந்து பால் உபப்பொருட்களை வாங்கும் சிறந்த சில்லறை விற்பனையாளர்கள் , மொத்த விற்பனையாளர்களையும் மற்றும் விற்பனை இலக்கைஎய்திய சிறந்த பாலகங்களையும் தேர்வு செய்து கவுரவப்படுத்தி நற்சான்றுவழங்குதல், கால்நடை மருத்துவம் மற்றும் தடுப்பூசி முகாம் அமைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாத இறுதியில் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்படும். இதில் சமையல் போட்டி, ஆவின் நிறுவனம் பற்றி இரண்டு நிமிட குறும்பட விளம்பர போட்டி மற்றும் ஆவின் நிறுவனம் தொடர்பான பல்வேறு நட வடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் போஸ்டர்கள் தயாரிக்கும் போட்டி நடைபெறும்.ஆவின் நிறுவனத்தின் பன்னீர் மற்றும் ஐஸ்கிரீம் வகைகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும்.இந்த ஆவின் தின கொண்டாட்டத்தில் ஆவின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.