districts

img

வந்தே பாரத் ரயில் உற்பத்தியை தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது ஐசிஎப் ஆலை முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, அக். 18- ஐசிஎப் வந்தே பாரத் விரைவு ரயில் உற்பத்தியை டெக்னாலஜி பார்ட்னர் என்ற பெயரில் தனியாரிடம் ஒப்படைக்காதே உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐடியு) சார்பில் சென்னையில் உள்ள ஐசிஎப் பொது மேலாளர் அலுவல கம் அருகே செவ்வாயன்று (அக். 18) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஐசிஎப் உள்ளிட்ட 7 ரயில்வே உற்பத்தி பிரிவுகளை கார்ப்பரேஷனாக மாற்றி கார்ப்பரேட் கையில் தாரை வார்க்காதே, ஐசிஎப் வந்தே பாரத் விரைவு ரயில் உற்பத்தியை பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்காதே, 1,700 குரூப் சி மற்றும் 300 குரூப் டி காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ரயில்வேயை கூறுபோடும் பிபேக் தேப்ராய் பரிந்துரையை திரும்பப் பெற வேண்டும், சிஎல்டபிள்யு (மேற்கு வங்கம்) உற்பத்தியாகும் 9000 எச்பி, 12000  எச்பி ஹை ஸ்பீடு எலக்ட்ரிக் இன்ஜின்  உற்பத்தியை தனியாரிடம் ஒப்படைக்காதே, போனஸ் சீலிங்கை ரத்து செய்ய வேண்டும்,  புதிய  ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலி யுறுத்தப்பட்டன. தலைவர் எஸ்.ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநிலச் செயலாளர் சி.திருவேட்டை, பொதுச்செயலாளர் பா.ராஜாராமன், செயல் தலைவர் வி.எம்.கிருஷ்ணகுமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

;