சென்னை. பிப்,26 சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் காதலர் தினம் "எக்ஸ்பிரஸ் லவ்" என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. சென்னையில் ஒரு காலத்தில் காதலர்களின் சந்திப்பு மையங்களாக இருந்த வணிக வளாகங்கள் இ-காமர்ஸ் வர்த்தகம் காரணமாக மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டன. இதனால் மக்கள் நடமாட்டம் குறைந்தது. பெருந்தொற்றுக்கு பின்னர் புத்துணர்ச்சியுடன் வணிக வளாகங்கள் செயல்பட தொடங்கியுள்ளன. வியாபாரிகளுக்கு வர்த்தகமும் பழைய நிலையை எட்டியுள்ளது. மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, காதலர் தினம் எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் சிறப்பாக நடத்தப்பட்டதாக வளாகத்தின் நிதிப்பிரிவு துணைத்தலைவர் சூராஜ்தாஸ் கூறியுள்ளார். இந்த தினத்தை முன்னிட்டு காதலர்களின் அணிவகுப்பும் நடைபெற்றது. இதனை பிரபல ஆடை வடிவமைப்பாளர் கருண் ராமன் ஒருங்கிணைத்தார்.