districts

  மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது

பொன்னேரி, ஜூன் 2-

    மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்குள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட் என மொத்தம் நாளொன்றுக்கு 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் 1ஆவது நிலையில் உள்ள 1ஆவது அலகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.