ஒன்றிய பாஜக அரசு 100 நாள் வேலை திட்ட பய னாளிகளுக்கு 6 வார கால மாக சம்பளம் வழங்காததை கண்டித்தும், தீபாவளிக்கு முன்பு உடனடி யாக சம்பளம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கங்கள் சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் ஒப்பாரி போராட்டங்கள் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், கண்டப்பன் குறிச்சி யில் வட்டச் செயலாளர் ராம கிருஷ்ணன் தலைமையில் ஒப்பாரி போராட்டம் நடை பெற்றது. மாவட்ட செய லாளர் எஸ்.பிரகாஷ், மணி ஆகியோர் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு பேருந்து நிலையம் அருகில் எல்.சி. மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் பொது மக்களிடையே பிரச்சார இயக்கம் நடைபெற்றது. சு .முரளி, நா. ராதா கிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினார், நிர்வாகிகள் இரா.பாரி, டி. கே. வெங்கடேசன், உதய குமார், ஜா.வே. சிவராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.