சென்னை,ஆக.21-
மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டு வரத்து பாதியாக குறைந்ததால் கடந்த மாதத்தில் தக்காளி விலை திடீரென அதிகரிக்க தொடங்கியது. அதிகபட்சமாக சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கோயம்பேடு சந்தைக்கு தக்காளியின் வரத்து மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. திங்களன்று 45 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்தது. தக்காளி வரத்து பழைய நிலைக்கு வந்து உள்ளதால் அதன் விலையும் வேகமாக குறைந்து வருகிறது. மொத்த விற்பனை கடைகளில் முதல் ரக தக்காளி ஒரு கிலோ ரூ.30-க்கு விற்கப்படுகிறது. வெளிச்சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.