விழுப்புரம்.டிச.3- விழுப்புரம் மாவட்டம், செஞ்சி யில் கழிப்பறை (டாய்லெட்) வடிவத்தில் பிறந்தநாள் கேக் வெட்டியது இணையத்தில் வைரலானது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி திருவண்ணாமலை சாலை, எல்.டி பேங்க் தெருவை சேர்ந்தவர் சபீர், இவரது தம்பி ஷாகீர் (17).இவர் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 30 ஆம் தேதி பிறந்தநாளை முன்னிட்டு அவரது அண்ணன் சபீர் இந்தியன் (டாய்லெட்) கழிவறை வடிவத்தில் 5 கிலோ கேக் ஆர்டர் செய்து அதை அவரது தம்பி பிறந்தநாள் அன்று அவருக்கு ஆச்சரியமூட்டும் வகை யில் கேக்கை வெட்டி சாப்பிட வைத்து பிறந்தநாள் விழாவை கொண்டாடி யுள்ளார். இந்தியன் டாய்லேட் முறை யில் கேக் வாங்கி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் சற்று அருவருப்பாக இருந்தாலும், சுகா தாரத்தை வலியுறுத்தும் வகையில் புதிய சிந்தனை உருவாக்கும் நோக்கில் இதுபோன்று செய்ததாக தெரிகிறது. இந்த பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைர லாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.