districts

வேலை வாங்கித் தருவதாக ரூ.7 லட்சம் மோசடி: ராணுவ வீரர் கைது

செஞ்சி,செப்.21- ரயில்வேயில் வேலை வாங்கித்த ருவதாக கூறி வேலூர் வாலிபரிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்த முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம் கழிஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்பாபு மகன் அஜித்குமார் (23). இவர் தனது உறவினர் ஹரிகரன் மூலம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா சத்தியமங்கலத்தை சேர்ந்த வசந்தகுமார் (51) என்பவருக்கு அறிமு கமானார். இவர் சொக்கனந்தல் சாலையில் ராணுவ பயிற்சி மையம் நடத்தினார். அப்போது அவர், தான் ராணுவத்தில் வி.ஆர்.எஸ். கொடுத்துவிட்டு தற்போது ராணுவ பயிற்சி மையம் நடத்தி வருவதா கவும், தனக்கு அரசியல் செல்வாக்கு மூலம் ரயில்வேயில் அரசு வேலை வாங்கித்தருவதாகவும், அதற்கு ரூ.7 லட்சம் செலவாகும் என்றும் கூறியுள்ளார். இதை நம்பிய அஜித்குமார், வசந்தகுமார் கூறியவாறு அவரது வங்கி கணக்கிற்கு 16.2.2019 அன்று ரூ.3 லட்சத்தை செலுத்தி யதோடு, 15.5.2019 அன்று ரூ.4 லட்சத்தை நேரில் கொடுத்துள்ளார். அதன் பிறகு ஒரு வருடமாகியும் அஜித்கு மாருக்கு வேலை வாங்கித்தராத தால் அவர், வசந்தகுமாரிடம் சென்று பணத்தை திருப்பித்தரும்படி கேட்டுள்ளார். அதற்கு 27.1.2022 தேதியிட்ட ரூ.5 லட்சத்திற்கான காசோலையை அஜித்குமாருக்கு வசந்த குமார் கொடுத்தார். அதோடு அந்த காசோலையை வங்கியில் செலுத்த வேண்டாம், பணத்தை விரைவில் கொடுத்து விடுகிறேன் என்று கூறினார். ஆனால் இதுநாள் வரையிலும் அரசு வேலையும் வாங்கித்தரவில்லை, பணத்தையும் திருப்பித்தராமல் வசந்தகுமார் ஏமாற்றி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி அஜித்குமார், 31.5.2022 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுத்தார். அதன் பின்னர் வசந்தகுமார், ரூ.2 லட்சம், ரூ.1,50,000, ரூ.3 லட்சம் என 3 காசோலைகளை அஜித்குமாருக்கு கொடுத்துள்ளார். அந்த காசோலைகளை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லை என்று திரும்பி வந்துவிட்டது.  பின்னர் கடந்த 9 ஆம் தேதியன்று சத்தியமங்கலம் பகுதியில் உள்ள வசந்த குமாரின் வீட்டிற்கு சென்று அஜித்கு மார் பணத்தை கேட்டார். அதற்கு வசந்த குமார், பணத்தை தர முடியாது என்று கூறியதோடு அஜித்குமாரை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.   இதுகுறித்து அஜித்குமார், மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் செய்தார். அதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து வசந்தகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

;