districts

பொன்னேரியில் ரவுடிகள் அட்டகாசம்

திருவள்ளுர், ஜூலை 6-

    பொன்னேரிக்கு உட்பட்ட  உப்பர பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சேவியர்.இவர் பொன்னேரி தாயுமான் செட்டி தெருவில் முட்டை கடை வைத்து மொத்த வியாபாரம் செய்து  வருகிறார். இந்நிலையில் புதனன்று  கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது மர்ம நபர்கள் வந்து தகராறில் ஈடுபட்டனர்.மேலும் சேவியரிடம் பணம் கேட்டு மிரட்டிய தாகவும் தெரிகிறது. இதனை சேவியர் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் அரிவாளுடன் முட்டை கடைக்குள் புகுந்து அனைத்து முட்டைடிரேவையும் வெட்டி உடைத்தனர். இதில் சுமார் 2 ஆயிரம் முட்டைகள் சேதமானது. பின்னர் காவல்துறையினர் முட்டை கடையை சூறையாடி தப்பிய ஒருவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணை யில் அவர் ஏலியம்பேடு பகுதியைச் சேர்ந்த பூபாலன் என்பது தெரிய வந்தது.