districts

போஸ்டரை அகற்றிய மேயர்

கடலூர்,ஜூன் 24-

     தமிழ்நாட்டின் சாலைகளில் பேனர் வைத்தால் கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அகற்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர். இதனையடுத்து, கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, கவுன்சிலர்கள், ஊழியர்கள் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் தடுப்புக்கட்டையில் ஒட்டப்பட்டு இருந்த அனைத்து போஸ்டர்களையும் அகற்றினர்.