மேல்மருவத்தூர், நவ. 24- செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், மேல்மருவத்தூர் அருகே கீழ்மரு வத்தூரில் டாஸ்மாக் (எண் 4361) இயங்கி வரு கிறது. மேல்மருவத்தூர், சோத்துப்பாக்கம், பொறையூர், வெங்கடேசபுரம், மழுவங்க ரணை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த மது பிரியர்கள், அரசுமதுபான கடையில், மது வாங்கி சென்று, அப்பகுதியிலேயே குடித்து விட்டு, சாலையில் செல்லும் பெண்களை கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். விவசாய நிலங்களில் அமர்ந்து மது அருந்துவதுடன், போதைதலைக்கேறிய, பின், பாட்டில்களை உடைத்தும், அங்கேயே பிளாஸ்டிக் டம்ளர், பிளாஸ்டிக் கேரி பேக்கு கள், வாட்டர் பாட்டில்களை போட்டுவிட்டு செல்வதால், அப்பகுதி விவசாய நிலம் மாசு ஏற்படுகிறது. இதனால், அப்பகுதியை சார்ந்த பெண்கள் பலமுறை துறை சார்ந்த அதிகாரி களுக்கு மனு அளித்தும், இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஞாயிறன்று (நவ.24), டாஸ்மாக்கை 100க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழு மற்றும் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட னர். தகவல் அறிந்து வந்தமேல்மருவத்துர் காவல் ஆய்வாளர் ஏழுமலை, பெண்களி டம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். கடையை மாற்று இடத்தில் அமைக்கும் வரை, போராட்டம் தொடரும் என பெண்கள் தெரிவி த்தனர்.