சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி, 63 வது வட்டம் களிமண்புரம் தாயார் சாஹிப் தெருவில் பழுதடைந்த மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும், தெருக்களை சுத்தம் செய்து குப்பைத் தொட்டி வைக்க வேண்டும், பழுதடைந்துள்ள தண்ணீர் குழாய், சாலைகளை சீரமைக்க கோரி சனிக்கிழமையன்று (மே 6) சென்னை மாநகராட்சி உதவி பொறியாளரிடம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் பார்த்திபன், கிளைநிர்வாகிகள் ரிஷி, சஞ்சய், தனுஷ் ஆகியோர் மனு அளித்தனர்.