திருவள்ளூர், நவ 1- திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட் பட்ட வல்லூர் ஊராட்சியில் தொடர்ந்து தெருநாய்கள் மற்றும் வீட்டு வளர்ப்பு நாய்கள் விஷம் வைத்துக் கொல்லப்படுவதாக தமிழ்நாடு காவல்துறையில் ஆன்லைன் மூலம் புகார் அளிக்கப்பட்டதால் பர பரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்க ளாக வல்லூர் ஊராட்சியில் உள்ள தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் விஷம் வைத்து கொல்லப்படுவதாகவும் கடந்த 29ஆம் தேதி வல்லூர் கிராமத்தை சேர்ந்த நபர்கள் சிலர் வீட்டில் உள்ள மூன்று நாய்களை விஷம் வைத்து கொன்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காவல்துறைக்கு ஆன்லைன் புகார் மூலம் அளிக்கப்பட்டுள்ளது.ஆனால் இரண்டு நாட்க ளாகியும் எந்தவித நட வடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் தீபாவளியன்று (அக்31) நள்ளிரவு மேலும் இரண்டு நாய்கள் விஷம் வைத்து கொல்லப் பட்டுள்ளன.சிக்கன் பக்கோடா போன்ற பொரு ளில் விஷம் வைக்கப்பட்டு அதை நாய்கள் உண்ணும் படி செய்து கொல்வதாகவும்,கடந்த சில மாதங்களுக்கு முன் அத்திப்பட்டு பகுதியில் இது போன்று 15 நாய்கள் ஒரேநேரத்தில் கொல்லப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் நாய்கள் விஷம் வைத்து கொல்லப் படுவதால் உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து புளூ கிராஸ் சொசைட்டி தலை யிட்டு விசாரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.