கூடுவாஞ்சேரி அருகே செயல்பட்டு வரும் எஸ்.ஆர்.எம். பொதுப் பள்ளியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி உள்பட ஐந்து சிறந்த பெண் ஆளுமைகளுக்கு மங்கையர் தாரகை விருது வழங்கப்பட்டது.பள்ளியின் இயக்குநர் மணிமங்கை சத்தியநாராயணன், தாளாளர் எம்.சுப்பிரமணியன் ஆகியோர் இந்த விருதுகளை வழங்கினர்.