districts

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் விளையாட்டு விழா

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விருகம்பாக்கம் பகுதி, கோயம்பேடு கிளை சார்பில் ஞாயிறன்று (பிப்.26) விளையாட்டு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரைப்படத் தொகுப்பாளர் சரத்குமார் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். வாலிபர் சங்கம் நடத்தி வரும் போதைக்கெதிரான கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு, பகுதி தலைவர் ராஜ்குமார், செயலாளர் மணிமாறன், பொருளாளர் கார்த்திக், துணைச் செயலாளர் வினோத், கிளைச் செயலாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.