districts

உடல் நலத்திற்கு தென்னிந்தியர்கள் முன்னுரிமை: ஆய்வில் தகவல்

சென்னை,மார்ச் 15- உடல் நலத்தை பாதுகாக்க தென்னிந் தியர்கள் அதிக முன்னுரிமை அளிப்பதாக பஜாஜ் அலையன்ஸ்  லைஃப் நிறுவனத்தின்   வாழ்க்கை லட்சியங்கள் தொடர்பான ஆய்வில்  தெரியவந்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான ஆய்வை சென்னையில் வெளியிட்டு பேசிய நிறுவனத்தின் தலைமைச் சந்தைப்படுத்தல் அதிகாரி சந்திரமோகன் மெஹ்ரா தென்  இந்திய மக்களின் முக்கிய வாழ்க்கை லட்சியங்கள்களில் ஒன்றாக உடல்நலம், நன்கொடை மற்றும் சுற்றுலா ஆகியவை  உள்ளன என்றார்.  பெருந் தொற்றுக்கு பிறகு  கொடை தொடர்பான சிந்தனை மக்களிடம்  61 விழுக்காடு அதிகரித்துள்ளதும்  என்றும் அவர் கூறினார். ஆயுள் காப்பீடு என்பது வாழ்க்கை லட்சியங்களை அடைவதற்கு மிகவும் விருப்பமான முதலீட்டுத் தேர்வாக உள்ளது. வாழ்க்கை  லட்சியங்கள் தயார்  நிலைக் குறியீடு என்பது இந்தியாவின் 47 விழுக்காட்டுடன் ஒப்பிடும்போது, தென் இந்தியாவில் 2023 ஆம் ஆண்டில் இது 41 விழுக்காடாக உள்ளது ஆரோக்கியமான மற்றும் உடல் நலத்துடன் கூடிய வாழ்க்கை முறையை பின்பற்றுதல், ஓய்வூதியத் திட்டமிடல், சேவைப் பணிகள் மூலம் சமுதாயத்திற்கு பங்களிப்பை வழங்குதல் ஆகியவை சிறந்த வாழ்க்கை லட்சியங்களில் தொடர்ந்து இந்த ஆய்விலும் இடம்பெற்றுள்ளன. தென்னிந்தியர்களில் இரண்டில் ஒருவர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் இருக்க வேண்டும் என்ற குறிக்கோளைக் கொண் டுள்ளனர்.  என்றும் அவர் தெரிவித்தார்.