districts

img

சர்வோ 4டி எக்ஸ்ட்ரா எஞ்ஜின் ஆயில் இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகம்

சென்னை, செப்.19-  சர்வோவின் பொன் விழா கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக பிர பல இந்திய திரைப்பட நடிகர் ஜான் ஆபிரகாம், மும்பையில் நடை பெற்ற வண்ணமிகு நிகழ்ச்சியில் மோட்டார் பைக்குகளுக்கான பிரத்யேகமான சர்வோ 4டி எக்ஸ்ட்ராவை அறிமுகம் செய்து வைத்தார். அவர் பேசுகையில், தேசத்தின் வருங்காலம் சிறப்பாக இருக்க ஆற்றல் தருவதற்கு இணையான ஒன்றாக இருக்கும் இந்தியன்ஆயில் மற்றும் சர்வோ உடன் கைகோர்ப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நாங்கள் ஒன்றி ைணந்து ஒவ்வொரு பைக் உப யோகிப்பாளருடன் பின்னிப் பிணைந்த ஒன்றாக சர்வோவை உருவாக்குவோம் என்று குறிப்பிட்டார். புதிதாக அறிமுகம் ஆகி உள்ள சர்வோ 4டி எக்ஸ்ட்ரா எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த உதவுவதோடு, 6000 கிமீ வரை தடையின்றி பயணிக்க உதவுகிறது. . இந்த நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய இந்தியன்ஆயில் தலைவர்  எஸ்.எம். வைத்யா, சர்வோ லூப்ரிகேட்டிங் ஆயில் இந்தியா, பசுமையான வருங்காலத்தை நோக்கி நடைபோட உறுதுணை புரிந்து வருகிறது என்றார். 2046க்குள் புகையில்லா எரிசக்தி என்ற இலக்கை இந்தியன்ஆயில் அடைய தொழில்நுட்ப மாற்றங்களுடன் கூடிய ஆற்றல் மிக்க,உயவு எண்ணையை சர்வோ படைத்து அளிக் கிறது என்றும் அவர் கூறினார்.