districts

img

“இளம் இதயங்களை காப்போம்” திரைப்பட திருவிழா துவக்கம்

சென்னை, செப். 29- சென்னை பிரசாந்த் மருத்துவமனை,  லயோலா கல்லூரி யின் காட்சி தொடர்பியல் (விஸ்காம்) துறையின்  ஒத்துழைப் போடு “இதய திரைப்பட திருவிழாவை நடத்துகிறது.   இளைஞர்கள் மத்தியில் இதய ஆரோக்கியம் மீதான விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் நடத்தப்படும் இத்திரைப்பட திருவிழாவை இளைஞர்களின்  பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தொடங்கி வைத்தார்.  திரைப்பட ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் மற்றும்  திரைப்பட எடிட்டர்  ஆர்.கே. செல்வா ஆகியோர் இத்தொடக்க விழா நிகழ்வில் முன்னிலை வகித்தனர். திரைப்பட விழாவை முன்னிட்டு குறும்படபோட்டி நடத்தப் படுகிறது. குறும்பட போட்டியில் திரைப்பட படைப்பாளிகள், மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்கலாம். 60 கல்லூரி களிலிருந்து 100-க்கும் அதிகமான குறும்பட படைப்புகள் பெறப்பட்டுள்ளன.  போட்டியில் முதல் இடம் பெறுவோ ருக்கு ரூ. 1லட்சம் 2வது இடத்திற்கு ரூ.50 ஆயிரம் மூன்றாவது  இடத்திற்கு ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும்.