districts

img

ஆராய்ச்சி மாநாடு 2023: சிறந்த 100 போஸ்டர்களுக்கு சான்றிதழ்

சென்னை, மே 7- சிமாட்ஸ் ஸ்கூல் ஆப் என்ஜினியரிங் கல்லூரி சார்பில் தண்டலத்தில் சவீதா பன்முக கல்வி – வருடாந்திர ஆராய்ச்சி மாநாடு 2023 நடைபெற்றது.  இதில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள், பேராசி ரியர்கள் கலந்து கொண்டனர்.   எதிர்கால பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்திற்காக இந்த மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் மொத்தம் 1000 போஸ்டர்கள் இடம் பெற்றிருந்தன. அதில் சிறந்த 100 போஸ்டர்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கு சிமாட்ஸ் வேந்தர் டாக்டர் என்.எம். வீரையன் சான்றிதழ் மற்றும் விருது கள் வழங்கி பாராட்டிப் பேசினார். இதில் இஸ்ரோ  திறன் மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் டாக்டர் சுதீர் குமார், மத்திய கல்வி அமைச்சக புத்தாக்க அதிகாரி, எஸ். செல்வராணி ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டு விருது பெற்றவர்களை பாராட்டிப் பேசினர்.  இந்நிகழ்ச்சியில் சிமாட்ஸ் பொறியியல் கல்லூரி இயக்குநர் டாக்டர் ரம்யா தீபக், முதல்வர் டாக்டர் பி. ரமேஷ், மேலும் சிமாட்ஸ் பல்கலைக்கழகத்தின் பிற கல்லூரிகளைச் சேர்ந்த முதல்வர்கள்  உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.