districts

img

விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

ஊத்தங்கரை வட்டத்தில் வீடற்ற விவசாய தொழிலாளர்களுக்கு வீட்டு மனை, வீடுகளுக்கு பட்டா, கால காலமாக பயன்படுத்தி வரும் விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தியும் கிராம கணக்கில் பட்டாக்களை பதிவேற்றம் செய்ய வேண்டியும் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டத் தலைவர் லெனின் தலைமை வகித்தார். மாநில செயலாளர் எம். முத்து கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.