சென்னை,ஜூன் 15-
மழைக் காலங்களில் சேதமடைந்த சென்னை நகா்ப்புற சாலைகள் பல்வேறு திட்டங்களின் கீழ் மறுசீரமைக்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சி பகுதியில் 387 கி.மீ. தொலை வில் பேருந்து வழி சாலை களும் 5,623 கி.மீ. தொலை வில் உட்புறச் சாலைகளும், 1,292 கி.மீ. தொலைவில் சிமெண்ட் சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதில், முதல்கட்டமாக 3,108 உட்புறச் சாலைகள், 87 பேருந்து வழித்தட சாலைகள் சீரமைக்கப் பட்டுள்ளன. தொடா்ந்து 312 கி.மீ. நீளத்திலான 2,095 சாலைகள் சீரமைக் கப்படவுள்ளன. இந்தச் சாலை மறுசீரமைப்புப் பணிக்கு ரூ.180.40 மதிப் பில் ஒப்பந்தம் கோரப் பட்டுள்ளன. விரைவில் இந்தச் சாலைகளின் மறுசீர மைப்புப் பணிகள் தொடங்க வுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.