வேலூர், ஆக.5 - வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சின்ன மிட்டூர் கிராமத்தை சேர்ந்த வர் பூஜா (21) இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. இந்த நிலையில், பூஜா வின் கணவர் குடும்ப அட்டை யில் பெயர் இணைப்பதற்கு, ஏற்கனவே தந்தையின் குடும்ப அட்டையில் இருக்கும் பெயரை நீக்கு வதற்கு இ சேவை மையம் ஒன்றில் பதிவு செய்துள்ளார். பின்னர் பூஜா புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து போது அதில் பூஜாவிற்கு அதிர்ச்சி தரும் வகையில் தகவல் வந்திருக்கிறது. இதில் மாவட்ட, வட்ட வழங்கல் துறை பதிவேட்டில் பூஜா இறந்து விட்டதாக கருதி அவரது ஆதார் எண்ணை முடக்கி வைத்தனர். இதனால் அதிர்ச்சிய டைந்த பூஜா தனது தந்தை யுடன் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற குறைதீர் கூட்டத்தில் ஆஜராகி, தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இறப்பு பதிவேட்டில் இருந்து தனது பெயரை நீக்கி, புதிய குடும்ப அட்டை வழங்க கோரி மனு அளித்தார்.