districts

img

உலக தரவரிசையில் இடம்பெற்ற சவீதா பல்மருத்துவ கல்விநிறுவனம்

சென்னை, மார்ச் 26 2023-ஆம் ஆண்டுக்கான க்யு.எஸ். உலகத் தரவரிசை (QS World Ranking) வெளியிடப்பட்டுள்ளது.  இதில் சென்னை அருகே உள்ள  சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறி வியல் கல்வி நிறுவனம்  டாப் 13 இடங்க ளுக்குள் இடம்பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்தப்பட்டியலில் இந்தியாவில் இருந்து ஒரு பல் மருத்துவ நிறுவனம் இடம்பிடித்தது இதுவே முதல் முறை யாகும்.  தனிப்பட்ட துறை சார்ந்த வகையில் உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் வரிசைப்படுத்தப்படுகின்றன. சென்ற 2022-ஆம் ஆண்டுக்கான உலகளாவிய தர வரிசையில் சவீதா 18-ஆவது இடத்தை பெற்றது. அதிலிருந்து தற்போது 13-ஆவது இடத்திற்கு உயர்ந்துள்ளது. இந்த சாதனை குறித்து கருத்து தெரி வித்த சவீதா பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் என்.எம். வீரய்யன் “எங்கள் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் கடின உழைப்பு மற்றும் மகத்தான அர்ப்பணிப்பு இல்லாவிட்டால் க்யு.எஸ். தரவரிசையில் இடம் கிடைத்திருப்பது சாத்தியமாகியிருக்காது என்றார்.