districts

img

ரயில்வே சுற்றுச்சுவர் பணி நிறுத்தி வைப்பு மார்க்சிஸ்ட் கட்சி, பொதுமக்கள் எதிர்ப்பு

சிதம்பரம், ஏப்.21- சிதம்பரம் ரயிலடி இந்திரா நகரைச் சுற்றி ரயில்வேதுறை பொதுமக்களின் வீட்டு வாசப்படியையொட்டி சுற்றுசுவர்   அமைக்கப் படுவதை கண்டித்தும், பொதுவழியை மறித்து சுவர் எழுப்புவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து நகர்மன்ற துணைத் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினருமான முத்துக்குமரன் தலைமை யில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகளையும் சந்தித்தும் கோரிக்கையை வலியுறுத்தினர். ஆனாலும், சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை ரயில்வே நிர்வாகம் தொடர்ந்தது. இதனை கண்டித்து  வியாழக் கிழமை(ஏப்.21) சிதம்பரம் ரயில் நிலையத்தை முற்று கையிடுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையில் 100-க்கும் மேற்பட்டமக்கள் ஒன்று திரண்டனர். இதனையடுத்து ரயில்வே துறை அதிகாரி கள், சிதம்பரம் வட்டாட்சி யர், காவல் துறையினரும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். சிதம்ப ரம் வட்டாட்சியர் அலுவ லகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில்  பொது மக்களுக்கு தேவையான இடத்தை அளந்து மாவட்ட ஆட்சியர் மூலம்  திருச்சி ரயில்வே கோட்ட மேலாளருக்கு  பரிந்துரைக் கடிதம் அனுப்புவது என்றும் அடுத்த 30 நாட்கள் வரைக்கும் சுற்று சுவர் அமைக்கும் பணி நடை பெறாது என்றும் உத்தரவாதம் அளித்தனர். இதனையடுத்து, போராட்டத்தை தள்ளி வைத்தனர். இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, நகரச் செயலாளர் ராஜா, நகர்மன்ற துணைத் தலை வர் முத்துக்குமரன், மாவட்டக்குழு உறுப்பி னர் ஜெயசித்ரா, கிளைச் செயலாளர்கள் விநாயக மூர்த்தி, ராஜி. சி. தண்டேஸ்வரர் நல்லூர் ஊராட்சிமன்றத தலைவர் மாரியப்பன் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

;