districts

ரெப்கோ வங்கி தனியார்மயமாவதை தடுத்து நிறுத்த அரசிடம் கோரிக்கை

சென்னை, செப். 8-  தாயகம் திரும்பியோர் கூட்டுறவு வங்கியின் நூறு  விழுக்காடு பங்கு முதலீட்டில் பர்மா, இலங்கையிலிருத்து தாயகம் திரும்பிய தமிழர்க் களுக்கு வீட்டுக் கடனை முன்னுரிமைப்படுத்தி வழங் குவதற்காக துவக்கப்பட்ட ரெப்கோ வீட்டுக் கடன் நிறு வனம் தனியார்மயம் ஆகிக் கொண்டிருப்பதை தடுத்து நிறுத்த தமிழக அரசு தலை யிட வேண்டும் என்று  கோரிக்கை எழுந்துள்ளது. இதன் தலைவராக தமிழ் நாடு அரசின் பொது மற்றும் மறுவாழ்வுத் துறை செயலாளர் இருந்ததை கடந்த ஆட்சியில் நீக்கி, தனி யாரை தலைவர் மற்றும் இயக்குநர்களை நியமித்தனர். எனவே தாயகம் திரும்பியோர் வீட்டுக் கடன் நிறுவனத்தை அரசு கைப்பற்றி இயக்குநர் குழுவை முழுமையாக மாற்றியமைத்து. தனியார் மயத்தை தடுத்து நிறுத்தி தாயகம் திரும்பியோர்க்கு வீட்டுக் கடனை முன்னுரி மைப்படுத்தி வழங்க வேண் டும் என்று நிறுவிய  இயக்குநர் டி.இ.திரு வேங்கடம் கேட்டுக் கொண்டுள்ளார். மேற்சொன்ன கோரிக் கைகளை வலியுறுத்தி சென்னை கிண்டியில் உள்ள ரெப்கோ வீட்டுக் கடன்  நிறுவனம் எதிரில் வரும் 16  ஆம்தேதி பிற்பகல் 1.15 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்த பங்குதாரர்கள் திட்ட மிட்டுள்ளனர்.

;