districts

img

நடமாடும் 15 நவீன ‘பேட்ச் ஒர்க்’ எந்திரங்கள்

சென்னை, டிச. 16 சென்னை மாநகராட்சியில் குண்டும் குழியுமாக உள்ள சாலை களை சீரமைத்து, சீரான சாலை களாக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக 15 நவீன எந்திரங்களை புதிதாக வாங்கவும் முடிவு செய்துள்ளது. பெருநகர சென்னை மாந கராட்சியில், சேதமடைந்த சாலை கள் பற்றிய புகார்களை குடியி ருப்பாளர்களிடம் இருந்து பெற்றது. அதன் அடிப்படையில், 6 மாதங்களில் ‘ குண்டு குழிகள் இல்லாத’ சென்னை மாநகரமாக மாற்ற உறுதி ஏற்றுள்ளது. பேருந்து வழித்தடம் மற்றும் உட்புறச் சாலைகளில் உள்ள குழிகள் மற்றும் பள்ளங்களை விரைவாக சரிசெய்வதற்காக 15 நடமாடும் நவீன ‘பேட்ச் ஒர்க்’ இயந்திரங்களை வாங்க திட்ட மிட்டுள்ள நிலையில், இந்த வாக்குறுதியை அளித்துள்ளது. மேலும், வரும் ஆண்டுகளில், சாலைகளில் பற்சக்கரங்களை கொண்டு பழைய சாலைகளை தோண்டிவிட்டு புதிதாக சாலை போட பயன்படும் ‘மில்லிங்’ இயந்தி ரங்களை சாலை ஒப்பந்த தாரர்கள் வைத்திருப்பதை போலவே, நடமாடும் ‘பேட்ச் ஒர்க்’ இயந்திரங்கள் சொந்த மாக வைத்திருப்பது கட்டாய மாக்கப்படும் என்றும் சென்னை பெருநகர மாநகராட்சியின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரூ.50 லட்சம் கேரள மாநிலத்திலுள்ள கொச்சி மாநகராட்சி நவம்பர் மாதம் குண்டு குழிகளை சீர்செய்யும் நடமாடும் நவீன எந்திரத்தை முதன்முதலாக பயன்படுத்தி சோதனை செய்துள்ளது. அந்த இயந்திரத்தின் விலை ரூ.1 கோடியே 76 லட்சம் என்று கூறப்படுகிறது. ஆனால், பெருநகர சென்னை மாநராட்சி தேர்ந்தெடுத்துள்ள அது போன்ற நவீன ‘பேட்ச் ஒர்க் ‘ எந்திரங்களை ரூ.50 லட்சத்திற்குள் வாங்க முடியும் என்று சென்னை மாநகராட்சி பொறியாளர்கள் மதிப்பீடு செய்துள்ளனர். வடகிழக்கு பருவமழையின் போது அக்டோபரில் 3 முறை பெய்த பலத்த மழையால், சேதமடைந்த சாலைகள் குறித்த புகார்கள் மாநகரம் முழுவதும் உள்ள பரவலான பொதுமக்களிடம் இருந்து வந்துள்ளது. வளசர வாக்கம் வேலன் நகர் 7 வது தெருவில் ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்டு, சாலையோரம் கொட்டப்பட்ட கட்டுமானப் பொருட்களால் சாலைகள் பாது காப்பற்றதாக மாறியுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இவை அண்மையில் 2 விபத்து களை ஏற்படுத்தியதாக சமூக ஊட கங்களில் பரவியது குறிப் பிடத்தக்கது. அது தவிர, என்எஸ்சி போஸ் சாலை, மின்ட் தெரு வுக்கு அருகில், மற்றும் கொண்டித் தோப்பில் உள்ள பேட்டு தெரு, படவேட்டம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பல தெருக்கள் அண்மையில் பழுதுபார்க்கப்பட்ட போதிலும் பெருமழையால் மீண்டும் குண்டும் குழியுமாக மாறி உள்ளதாக கூறப்படுகிறது. ஜார்ஜ் டவுனில், லிங்கி செட்டி தெரு மற்றும் டிஎன்பிஎஸ்சி சாலையும் பெருமளவில் சேத மடைந்துள்ளதாக பயணிகள் தெரி விக்கின்றனர். 2076 இடங்களில் பள்ளங்கள் டிசம்பர் 1 ஆம் தேதி நிலவரப்படி, சென்னை மாநகர சாலைகளில் பழுதுபார்ப்பு தேவைப்படும் 2,076 சாலைப் பள்ளங்களை சென்னை மாநகராட்சி கண்டறிந்துள்ளது. அண்ணாநகர் மண்டலத்தில் மட்டும் 181 இடங்க ளும் அதனைத் தொடர்ந்து வளசர வாக்கத்தில் 144 இடங்களும் கண்டறியப்பட்டுள்ளது. அனைத்து மண்டலங்களிலும் அடையாளம் காணப்பட்ட மொத்த பள்ளம் குழி களின் எண்ணிக்கை 1,860 ஆகும். மேலும், பேருந்து வழித்தட சாலை களில் 216 குண்டு குழி இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது, சென்னை மாநக ராட்சி வசம் குண்டு குழிகளை சீர்செய்யும் 4 இயந்திரங்கள் உள்ளன. அவை தேவையின் அடிப்படையில் பயன் படுத்தப்படு கின்றன. பெருநகர சென்னை மாநகராட்சியானது நீண்ட கால நோக்கில், ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒன்று என்ற வீதத்தில் 15 இயந்திரங்களை பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கிடையில், 15 இயந்தி ரங்களும் இறுதி செய்யப்படும் வரையில், சென்னை மாநகரில் பெய்த கனமழை காரணமாக, ஒரு மண்டலத்திற்கு 2 இயந்திரங்கள் பயன்படுத்தி சாலைகளில் உள்ள மேடு பள்ளங்களை சீரமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறி யுள்ளனர். 3 மாதத்தில் முடிக்க ஒப்பந்தம் ஒவ்வொரு மண்டலத்திற்கும் சாலைகளை சீரமைக்க மதிப்பிடப்பட்ட திட்ட மதிப்பு ரூ.49  லட்சம் ஆகும். ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்ட 3 மாதங்களில் பணி களை முடிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. அதேபோல், ஒப்பந்த தாரர்கள் மாநகராட்சி பட்டிய லிட்டுள்ள உபகரணங்களை வைத்தி ருக்க வேண்டும் என்றும் கூறப் பட்டுள்ளது. அதில் குண்டு குழி களை ஒட்டும் எந்திரம் மற்றும் பள்ளம் வெட்டும் இயந்திரங்கள் மற்றும் ‘பேட்ச் ஒர்க்’ செய்த பிறகு அதனை மிதித்து சீர்செய்யும் மினி ரோலர்கள் ஆகியவை அடங்கும். இந்த சாலை சீரமைப்பு பணி களின் போது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, வாகன ஓட்டு நர்கள் மற்றும் பயணிகளுக்கு எச்சரிக்கை செய்யும் தடுப்பு மற்றும் எச்சரிக்கை பலகைகள் போன்ற போக்குவரத்து மேலாண்மை நடவடிக்கைகளையும் ஒப்பந்த தாரர்கள் வழங்க வேண்டும். சாலைப் பழுதுபார்ப்பு பணிகள், குளிர்ந்த தார்கலவை செலுத்துதல் செயல்முறை மூலம் மேற்கொள்ளப்படும். சூடான தார் கலவைகள் பயன்படுத்தப்படு வதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்ததையடுத்து, குளிர் தார் கலவை முறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சாலை செப்பனிடும் பணிகளின் போது, சேதமடைந்த சாலையின் குண்டு குழிகள் குறியீடு செய்யப்பட்டு, அவை சுத்தம் செய்யப்பட்ட பின்னர், பேட்ச் ஒர்க் மூலம் செப்பனிடப்படும். தொடர்ந்து சிறிய கற்களின் கல வைகள் நிரப்பப்பட்டு சிறிய ரோலர்கள் மூலம் மேற்பரப்பு சமப்படுத்தப்பட்டு சாலை மென்மை யாக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி பொறியாளர்கள் கூறி யுள்ளனர்.