அம்பத்தூர், ஜூன் 21- அம்பத்தூர் அத்திப்பட்டில் இருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டைக்குச் செல்லும் சாலை முற்றிலும் பழு தடைந்து குண்டும் குழியுமாக காட்சி யளிக்கின்றன. அம்பத்தூர் அருகே உள்ள அயப் பாக்கம், எம்.ஜி.ஆர்.புரம், அயப்பாக் கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, ஐயப்பா நகர், செல்லியம்மன் நகர், ஐசிஎப் காலனி, கலைவாணர் நகர், பாரதிதாசன் நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பேஸ் 1, 2, 3 அத்திப்பட்டு ஆகிய பகுதிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக் கின்றனர். இவர்கள் அம்பத்தூர் தொழிற் பேட்டை, அண்ணாநகர் ஆகிய பகுதி களுக்கு செல்ல வேண்டும் என்றால், அத்திப்பட்டு அரசு பள்ளிக்கு எதிரே உள்ள சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். ஆனால் இந்த சாலை பல மாதங்களாக பராமரிக்கப்படாமல் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இரவு நேரங்களில் மின்விளக்கு வசதி இல்லாததால் வயதானவர்கள், வாகன ஓட்டிகள் அடிக்கடி பள்ளத் தில் விழுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அதேபோல் முறையான மழைநீர் வடிகால் வசதி இல்லாததால், மழைநீர் வெளியேற வழியில்லாமல் சாலையில் குளம்போல் தேங்கி நிற்கிறது. தினசரி ஆயிரக்கணக்கான தொழி லாளர்களும், வாகன ஓட்டிகளும் இந்த சாலையை கடக்கின்றனர். குறிப்பாக கனரக வாகனங்கள் இரவு பகல் பாராது அதிகளவில் செல்வதால், சாலை தொடர்ந்து பழுதடைந்து வருகிறது. பல முறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக் கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் உடன டியாக சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.