திருப்பத்தூர்,அக்,31 இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறு வனத்தில் இலவசமாக போட்டோ கிராபி, வீடியோ கிராபி மற்றும் செல்போன் பழுது பார்த்தல் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 30 நாட்கள் பயிற்சி அளிக்கப் படும். பயிற்சி துவங்கும் நாள் நவம்பர் 17. பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் நவம்பர்ஆம் தேதி வரை விண்ணபிக்கலாம். வயது வரம்பு 18 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த கிராமப்புற மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியில் சேர ஆர்வமுள்ள வர்கள் தங்களது பெயர், முகவரி மற்றும் தொலைபேசி (அ) கைபேசி எண்ணுடன் மேற்கண்ட தேதிக்குள் நேரிலோ (அ) அஞ்சல் அட்டை மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, இயக்குநர், இந்தியன் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம், எண்:14, புதுப்பேட்டை ரோடு, ஐடிபிஐ வங்கி கிளைக்கு மேல் மாடியில், திருப்பத்தூர் 635601, 04179-299168, என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.